Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. 2 மாவட்டங்களில் இன்று மறு வாக்குப்பதிவு….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதில் முதல் கட்ட தேர்தலின்போது 77.43% வாக்குப்பதிவும் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலின் போதும் 78.47% வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் வருகின்ற 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு இரண்டு மாவட்டங்களில் இன்று மறுவாக்குப்பதிவு  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பூந்தண்டலம் கிராம ஊராட்சிகளில் வார்டு-12 க்கான உறுப்பினர் தேர்தலில் வாக்குச் சீட்டுகள் தவறாக அச்சிடப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதியில் இன்று மறுவாக்கு நடைபெறும். இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றிய கிராம ஊராட்சியில் 2-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு 1 வது வார்டு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.  இதன் காரணமாக மறுவாக்கு இன்று நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |