ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 6ஆம் தேதி அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.
சென்னை அருகம்பாக்கத்தில் வரும் திங்கள் அன்று மதியம் 12 மணிக்கு 9 மாவட்டத்திற்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.. வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் விளக்கும் என கூறப்படுகிறது.