Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர், சகோதரர்கள் வீடுகளில்…. லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி ரெய்டு!!

புதுக்கோட்டை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் முருகானந்தம், சகோதரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகாடு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்.. இவர் புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். தற்போது விருப்ப ஓய்வு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உறுதியான தகவல் தெரியவில்லை.

இந்நிலையில் இவரது வீடு, இவரது சகோதரர்கள் ரவிச்சந்திரன், பழனிவேல் வீடுகளில் இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்..

ஏனென்றால் இவரது சகோதரர் பழனிவேல் கடந்த அதிமுக ஆட்சியின் போது முன்னாள் அமைச்சர் வேலுமணி இடமிருந்து ஒப்பந்தம் பெற்று உள்ளாட்சித் துறை சார்பில் வழங்கப்பட்ட மின்விளக்குகள் உள்ளிட்ட சிலவற்றை ஒப்பந்தம் எடுத்ததாக கூறப்படுகிறது. அதில், பல்வேறு குற்றச்சாட்டு எழுந்துள்ளது..

அந்த அடிப்படையில் தற்போது முருகானந்தத்தின் வீடு, அவரது சகோதரர்களான ஒப்பந்ததாரர் பழனிவேல், அரசு ஊழியர் ரவிச்சந்திரனின் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் 40 லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |