தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்ற புதிய திட்டத்தை 2012-13 முதல் அமலாக்கியுள்ளது. இ;த்திட்டத்தின் செயல்பாடுகள் மத்திய அரசு மற்றும் மாநில அரசு 60:20 என்ற விகிதத்தில் நிதி செலவு செய்கிறது. ஊரக ஏழை மக்களுக்கான வலுவான, உயிரோட்டத்துடன் கூடிய அமைப்புகளை உருவாக்கி, நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத பல்வேறு சேவைகளையும் முறையாகப் பெற வழிவகை செய்து, வாழ்வாதாரத்தை உயர்த்தி குடும்ப வருமானத்தைப் பெருக்குவதே இவ்வியக்தத்தின் நோக்கமாகும்.. இந்நோக்கத்தினை மையமாகக் கொண்டு, ஏழை எளியவர்கள் அடங்கிய மக்கள் அமைப்புகளை உருவாக்கி, அதன் மூலமாக அவர்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்கள், வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகள், பொதுவான சேவைகள், அடிப்படை வசதிகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு இவ்வியக்கம் வழிகாட்டும்.
அந்தவகையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு ரூபாய் 159 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் 60 சதவீத நிதியும், மாநில அரசு சார்பில் 40% நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தில் ஊரக பகுதிகளில் விடுபட்ட ஏழை, எளிய மக்களை கண்டறிந்து சுய உதவி குழுக்கள் இணைத்தல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், ஏழை, எளிய மக்கள் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.