சேலம் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக பேருத்தை தவற விட்ட பயணிகள் பேருந்து நிலையத்திலேயே இரவு முழுவதும் கொசுக்கடியில் தவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரிப்பின் காரணமாக தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இரவு 9 மணிக்கே பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் பேருந்து நிலையத்திலிருந்து நீண்ட தூரம் வரை செல்லும் பேருந்துகள் காலையில் இயக்கப்பட்டன.
மேலும் மதுரை உள்ளிட்ட அருகிலுள்ள ஊர்களுக்கு மாலை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனால் கால தாமதமாக வந்தால் பேருந்தை தவறவிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்து நிலையத்திலேயே இரவு முழுவதும் கொசுக்கடியில் தவித்துள்ளனர்.