பிரான்ஸில் ஆன்லைன் மூலமாக சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதாக குழந்தைகள் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது .
கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் வந்ததிலிருந்து சிறுவர்கள் அதிக நேரம் ஆன்லைன் பயன்படுத்தும் நிலையில் ஆன்லைனில் அவர்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள், மிரட்டல்கள் அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிறுமிகளுக்கு ஆபாச படங்கள் அனுப்புவது, அவர்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் இருந்து எடுத்து ஆபாசமாக மாற்றி அதனை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பது, பாலியல் தொல்லைகள் கொடுப்பது போன்ற செயல்கள் 57 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
இதனை செய்பவர்கள் பெரும்பாலானோர் இளம் பருவத்தினர் என்று E -enfance குழு கூறியுள்ளது. இதனால் 14 முதல் 16 வயது மிக்க சிறுமிகள் அதிகமாக பாதிக்கப் படுவதாக கூறப்படுகிறது. பெரும்பாலான இளம் ஆண்கள் தங்கள் முன்னாள் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வைத்து பிளாக் மெயில் மற்றும் மிரட்டல் விடுத்து துன்புறுத்தலுக்கு ஆளாக்குகிறார்கள். அதே போல வெப்கேம் பிளாக்மெயில் போன்ற துன்புறுத்துதலுக்கு ஆளாக்குவதாக தெரியவந்துள்ளது.