Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு … ரூ.5,000 நிவாரண வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ….!!

புதுச்சேரியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இ-பாஸ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும், நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக புதுச்சேரியில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனைத்து சங்க நல கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கொரோனா ஊரடங்கால் 6 மாத காலம் வருவாய் இன்றி தவிக்கும் தங்களுக்கு உதவி தொகையாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.

6 மாத காலத்திற்கு சாலை வரியை ரத்து செய்து வாகன கடனுக்கான வட்டியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |