Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

ஊரடங்கிலும் 100 கி.மீட்டர் சைக்கிள் பயணம்- நடிகர் ஆர்யா சாதனை.

100 கி.மீட்டர் சைக்கிள் பயணம் செய்த சாதனையை நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

தமிழ் திரையுலகின் பிரபலமான ஹீரோவான ஆர்யா சிறந்த சைக்கிள் பந்தய வீரராக திகழ்கிறார்.இவர் சர்வதேச அளவிலான மற்றும் தேசிய அளவிலான சைக்கிள் பந்தய போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவ்வாறு சைக்கிள் பந்தயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஆர்யா தினமும் தனது வீட்டிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சைக்கிளில் பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்  ஆர்யாவுடன்அதோடுபல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த சந்தானம் முதல் முறையாக ஹீரோவாக ஒப்பந்தம் ஆனபோது உடல் எடையை குறைப்பதற்காக இவருடன் தான் சைக்கிள் பயணம் செய்துள்ளார்.

தற்போது கொரோனா  வைரஸ் காரணமாக ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் சைக்கிள் பயணத்தை கைவிடாமல் ஆர்யா தனது தோழர்களுடன் விடியற்காலையில் சைக்கிளில் பயணம் செய்து உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதைத்தொடர்ந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்னை புறநகர் பகுதிக்கு 100 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிளில் பயணம் செய்து  சாதனை படைத்ததை நிகழ்வை தனது    டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் ஆர்யா.

Categories

Tech |