தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை அரசு அறிவித்து ஜூலை 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஜவுளி, நகை கடை ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும். கடற்கரையில் தடுப்புகள் அமைத்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். மக்கள் கூட்டமாக வருவதை தவிர்க்க கண்காணிப்பு தீவிரபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.