நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் இரவு 10.30மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். உணவகங்கள் இரவு 10 மணி வரையும், மத வழிபாட்டுத்தலங்கள் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும், திருமண விழாவில் 25 பேர் பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.