Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் தளர்வு…. கீழடியில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடக்கம்….!!!!

பண்டைய காலம் முதலே தமிழர்கள் நாகரிகத்தில் முன்னோடியாக விளங்கியவர்கள் என்பதை கீழடி அகழ்வாராய்ச்சி எடுத்துக் கூறி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொல்லியல் துறை சார்பாக 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வந்தன. அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு நடந்த அகழ்வாய்வில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.

இந்த ஆண்டு நடந்த அகழ்வாராய்ச்சி பணியில் கீழடி மட்டுமன்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய பகுதிகளில் அகழாய்வு நடந்தது. அதில் பாசி மணிகள், தாயக்கட்டை, காதில் அணியும் தங்க ஆபரணம், முதுமக்கள் தாழி மற்றும் மனித மண்டை ஓடு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கிடைத்தது. இந்நிலையில் கொரோனா தமிழகத்தில் அதிதீவிரமாக பரவ தொடங்கியதால் கடந்த மாதம் பத்தாம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் அகழாய்வுப் பணிகள் கடந்த மாதம் பத்தாம் தேதி முதல் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை நேற்று முன்தினம் அறிவித்த நிலையில், கீழடியில் மீண்டும் மகள் ஆய்வு பணிகள் தொடங்கியுள்ளது. 20 பேருக்கு பதிலாக 8 பேர் மட்டுமே பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Categories

Tech |