தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொற்று குறையாத 11 மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்று அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.