Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் தளர்வு: தமிழகம் முழுவதும் அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட வந்த  ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் நாளொன்றுக்கு 50 டோக்கன் என ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தலா 10 டோக்கன் வீதம் வழங்கி ஆவணப் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை இயன்றவரை உடனடியாக வழங்கி பொதுமக்கள் திரும்பவும் அலுவலகம் வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |