Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் தளர்வுகள்…. கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து நாளை முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி நாளை முதல் பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவை தொடங்க அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் இயங்கவும்,மத வழிபாட்டுத்தலங்கள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் காலை  5 மணி வரை அமலில் இருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |