தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்து தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதை திருப்பி தரக்கோரி ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதில், “முழு ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பி தர போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், வாகனங்களில் உள்ள உதிரி பாகங்கள் காணாமல் போகும் என்ற அச்சத்தினால் திருவொற்றியூரில் வாகன ஓட்டிகள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.