Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் முதல்நாளே 2,409 வழக்குப்பதிவு…. 1,805 வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்து தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது.

இந்த ஊரடங்கு நாட்களில் தேவையின்றி வாகனங்களில் யாரவது வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றி திரிந்ததனர். எனவே அவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதன்படி ஊரடங்கின் முதல்நாளில் சென்னையில் 2,409 வழக்குப்பதிவுகளும், 1,805 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |