சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதி ஊரடங்கால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதனால் கடைவீதி, லீபஜார், செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட் மற்றும் புதிய பேருந்து நிலையத்திலிருக்கும் கடைகள் உட்படஅனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் தடையை மீறி கடைகள் செயல்படுகின்றதா என்று அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.