ஊரடங்கு உத்தரவால் ஆதவற்றோர்களுக்கு மாநகராட்சி தன்னார்வலர்கள் உதவிகள் செய்தனர்.
கொரோனோவால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், வீடு இன்றி வாழும்ஏழைகள், ஆதரவின்றி சாலைகளில் இருந்த நபர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முடிவுசெய்தது திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம். அதன் அடிப்படையில் தன்னார்வலர்கள் கொண்ட இளைஞர்களை ஒருங்கிணைத்து, ஆதரவற்றவர்களை மீட்கும் பணி தொடங்கியது.
இதுவரை 160 பேர் மீட்கப்பட்ட நிலையில், அனைவரும் மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். மனநலம் பாதிக்கப்பட்டகள் முதியவர்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டதால் வீடுகளுக்கு செல்ல இயலாமல் தவித்தவர்கள் என வகைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்டு கவனிப்பாரற்ற நிலையில் சாலைகளில் இருந்து மீட்கப்பட்ட நபர்களுக்கு முடிதிருத்தம் செய்து, குளிக்க வைத்து கவனிக்கின்றனர் இந்த இளைஞர்கள். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்ட பின்பு இவர்களை தொடர்ந்து பராமரிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றது மாவட்ட நிர்வாகம்.
அதே வேளையில் 144 தடை உத்தரவால் வீடுகளுக்கு செல்ல இயலாமல் மீட்கப்பட்டவர்கள் தங்கள் இல்லங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளையும், வெளிமாநிலத்தவர்கள் தங்கள் இருப்பிடங்களை செல்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.