Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு உத்தரவு… நடந்தே தமிழகம் வந்த இளைஞர்கள்.. சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டு தனிமை…சுகாதார துறை அறிவுறுத்தல்..!!

ஊரடங்கு உத்தரவால் மகாராஷ்டிராவில் வேலை இழந்து  தமிழக இளைஞர்கள் அம்மாநிலத்தில் இருந்து ஆயிரம் கிலோமீட்டர்கள் நடந்து தமிழகத்தை அடைந்தனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த ஏழை இளைஞர்கள் மகராஷ்டிரா மாநிலத்தில் சோலாப்பூரில் பணியாற்றி வந்தனர். ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மகராஷ்டிராவில் சிக்கிக்கொண்ட அவர்களால் தமிழகத்திற்கு வர இயலவில்லை.

அவர்கள் பணியாற்றிய நிறுவனம் சார்பில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்த போதிலும், அவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடிவெடுத்தனர். அதன்படி மார்ச் 29ஆம் தேதி இரவு சோலாப்பூரில் இருந்து நடை பயணத்தை தொடங்கி அவர்கள், நெடுஞ்சாலை வழியாக ஆறு நாட்களில் சுமார் ஆயிரம் கிலோமீட்டர்கள் நடந்து நேற்று திருச்சி வந்தடைந்தனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் அருண் என்ற தன்னார்வலர் அவர்களை கார் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றார். மருத்துவ பரிசோதனை நடத்திய பின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |