ஊரடங்கு காரணமாக ராணி எலிசபெத் வீட்டு திருமணம் மிகவும் சாதாரணமாக நடந்து முடிந்தது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் பேத்தியான 31 வயதுடைய பீட்ரைசுக்கும் பிரபல தொழிலதிபரும் கோடீஸ்வரருமான 37 வயதுடைய எடோர்டோ மேபெல்லி மோஷிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இந்த வருடம் மே மாதத்தில் மிகவும் விமர்சையாக திருமணம் நடக்கவிருந்தது .ஆனால் உலகம் முழுவதிலும் கோரனோ வைரஸ் தோற்று பிரவல் காரணமாக ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகளால் இத்திருமணம் ஒத்திவைக்கப்பட்டது .
இந்நிலையில் நேற்று இருவருக்கும் மிக சாதாரண முறையில் திருமணம் நடைபெற்று முடிந்தது.இந்த திருமணவிழாவில் இங்கிலாந்து அரசு குடும்பத்தைச் சேர்ந்த ராணி இரண்டாம் எலிசபெத் அவருடைய கணவர்,மகன் உள்ளிட்ட 20 நபர்கள் மட்டுமே கலந்துகொண்டு திருமணம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.