தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன் காரணமாக புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் முக்கிய சாலைகளில் அத்தியாவசிய கடைகளைத் தவிர பிற கடைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் நாளை முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளைத் திறக்கலாம். ஹோட்டல்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 50 பேர் அமர்ந்து சாப்பிடலாம். இரவு 9 மணி வரை பார்சல் சேவை வழங்கலாம். கோவை மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதி. சில்லரை விற்பனை கூடாது என கூறியுள்ளது.