பிரான்சில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை வெளியே செல்வதற்கு அனுமதி சீட்டு தேவையில்லை என அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரான்ஸ் மக்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ள நேரத்தில் வெளியில் செல்ல அனுமதி சீட்டு தேவை இல்லை என்று கூறியுள்ளார்.
இதிலும் சில கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதில் ஏதேனும் ஒரு காரணத்திற்காக மட்டும் செல்ல அனுமதி வழங்கப்படும். 10 கிலோ மீட்டருக்கு அதிகமான தொலைவு பயணிக்க முடியாது அவ்வாறு பயணிக்க வேண்டும் என்றால் அனுமதி சீட்டு கட்டாயம் எனவும் கூறியுள்ளார். ஆனால் வசிக்கும் முகவரி சான்றிதழை காவல்துறையினர் கேட்டால் காட்ட வேண்டும் என்று கூறினார். குறிப்பாக முகவரியுடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் வேலைக்கு செல்லும் மக்கள் நிறுவனத்தின் அனுமதி சான்று மற்றும் வெளியே செல்லும் அனுமதிச் சீட்டு இரண்டும் வைத்திருப்பது கட்டாயம் என்றும் அவர் கூறியுள்ளார். மாலை 7 மணி முதல் அதிகாலை 6 மணி வரை தேசிய அளவிலான ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் அனுமதிச் சீட்டு கட்டாயம் என்றும் அவர் கூறியுள்ளார்.