ஊரடங்கு காலத்தில் காணொளி மூலம் விரிவுரைகளை வழங்கியதால் யூடியூப் தனக்கு நான்கு லட்சம் ரூபாய் கொடுத்ததாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் சாலை பணிகளை ஆய்வு செய்த மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி, மத்திய பிரதேசத்தின் ரட்லம் என்ற இடத்தில் நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் நான் இரண்டு வேலைகளை செய்தேன்.
அதில் ஒன்று நான் வீட்டில் சமையல் செய்ய தொடங்கினேன். மற்றொன்று காணொலி காட்சி மூலம் விரிவுரைகளை வழங்கினேன். அதனை நான் யூடியூபில் பதிவேற்றம் செய்ததை தொடர்ந்து, அதிகமான பார்வையாளர்கள் அவற்றை பார்த்ததால் யூடியூப் நிறுவனம் எனக்கு மாதம் நான்கு லட்சம் ரூபாய் கொடுக்கின்றது என்று கூறினார்.