Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு காலத்தில்… ” உடல் எடை அதிகரிப்பு”… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

பிரிட்டன் நாட்டில் தழுவிய சுகாதாரம் உடல் நிலை குறித்து ஓபினியம் என்ற அமைப்பு ஆய்வு செய்தது. இந்த அமைப்பு மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் 41 சதவீதம் தங்களது உடல் எடை அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த 15 மாதங்களாக ஊரடங்கு காரணமாக மக்களின் பழக்க வழக்கங்கள் மாறி உள்ளது. இதனால் பலரின் உடல் எடை அதிகரிப்பதை கண்டு ஆச்சரியம் ஏற்படவில்லை.சிற்றுண்டிகளை உண்டதும் வேண்டிய நேரத்தில் சாப்பிடாததும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தது என கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் சராசரியாக ஒருவருக்கு நான்கு கிலோ எடை அதிகரித்துள்ளது. இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உடல் எடையை குறைக்கும் வகையில் தொலைக்காட்சியில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது உடல் எடையை குறைப்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்கும் செயலிகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஜோ சர்ச்சில், தெரிவித்துள்ளார்.

Categories

Tech |