கொரோனா ஊரடங்கு காலத்தில் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசிறகு உச்ச நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது .
கொரோனா காலத்தில் குறிப்பாக மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான ஆறு மாத கால இடைவெளியில் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனிடையே இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில் பொது மக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்படவேண்டுமென கூறினர்.
மேலும் இது தொடர்பான தெளிவான பிரமாணப் பத்திரத்தை ஒரு வார காலத்திற்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.இந்த பிரமாணபத்திரத்தில் உச்சநீதி மன்றத்தின் சார்பாக கேட்கப்பட்டுள்ள பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் அளிக்கபட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.