Categories
உலக செய்திகள்

ஊரடங்கு கால புகைப்படங்கள் அடங்கிய புத்தகம்.. பிரிட்டன் இளவரசி வெளியீடு..!!

பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் கொரோனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்க காலகட்டத்தில் உள்ள புகைப்படங்களை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

பிரிட்டன் சிம்மாசனத்தின் இரண்டாம் இளவரசர் வில்லியமின் மனைவி இளவரசி கேட் வில்லலியம் கடந்த வருடத்தில் தேசிய உருவப்படத்துடன் புகைப்படத்தை வெளியிடும் திட்டத்தை ஆரம்பித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பிரிட்டனில் முதலில் தோன்றிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலகட்டத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுள்ளார்.

இதில் சுமார் 31,000க்கும் அதிகமான புகைப்படங்கள் கிடைத்துள்ளது. அவற்றில் 100 புகைப்படங்களை கேட் உட்பட ஒரு குழுவினர் சேர்ந்து தேர்வு செய்துள்ளனர். அதன் பிறகு புத்தகமாக அறிவிக்கப்படும் முன் டிஜிட்டல் மற்றும் சமூக கண்காட்சியில் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்திற்கு Hold Still: A Portrait of our Nation in 2020 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் அறிமுக பக்கத்தில் கேட் எழுதியிருப்பதாவது, ” இதன் வாயிலாக நாம் எல்லோரும் அனுபவிக்கும் வாழ்க்கையை பதிவாக்க, தனிப்பட்ட நபர்களின் கதைகளை படிக்கவும், தொற்றுநோய் பாதித்த காலத்தில் நம் குடும்பங்கள் மற்றும் சமூகம் சந்தித்த தருணங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்துவதற்காகத்தான் புகைப்பட கலையை உபயோகிக்க நான் விரும்பினேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து வருகின்ற மே மாதம் 7 ஆம் தேதியிலிருந்து புத்தகம் விநியோகிக்கப்படவுள்ளது. இதில் கிடைக்கப்பெறும் பணத்தை National Portrait  Gallery மற்றும் British Mental Health Charity Mind போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு பங்கிட்டு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |