நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் காவலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்யக்கூடாது.
அடையாள அட்டையுடன் பயணிக்கும் பணியாளர்களை உடனே அனுமதிக்க வேண்டும்.
நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு செல்வோர் அழைப்பு கடிதத்தை காண்பித்தால் அனுமதிக்க வேண்டும்.
அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர், பணி முடிந்து திரும்புவோரை அனுமதிக்க வேண்டும்.
ஊரடங்கு வாகனச் சோதனையின் போது கனிவாகவும், மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
பத்திரிக்கை, மருத்துவம், பால், மின்சாரம், சரக்கு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களை அனுமதிக்க காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.