Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: தமிழகத்தில் மீண்டும் கடைகள் மூடல்?….. பரபரப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வு கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளையுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஊரடங்கு நீட்டிப்பு அது குறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் நேற்று அதிகரித்துள்ளது. ஏற்கனவே கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு வலியுறுத்திய நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகம் கூடும் மால்கள், பெரிய கடைகள் உள்ளிட்டவற்றை மூடலாமா என முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |