தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட வந்த ஊரடங்கானது ஜூன்-7 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஊரடங்கில் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியே சுற்றி வருகின்றனர். இதனால் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இவ்வாறு ஊரடங்கை மீறி ஏராளமானோர் சாலைகளில் சுற்றுவதால் வாகன சோதனையை மீண்டும் தீவிரப்படுத்த காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி இன்று முதல் தீவிர வாகன சோதனை நடத்தப்பட உள்ளது. மேலும் தேவையின்றி வெளியே செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும் அதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர்.