தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மேலும் இரண்டு வாரம் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பாமல் பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விதிமுறைகளை பின்பற்றாமல் செல்லும் பேருந்துகளால் ஆபத்து ஏற்படுகிறது. பயணிகள் கூட்ட நெரிசலில் செல்லாமல் பேருந்துகள் அதிகரிக்கப்படும். நடத்துனர்கள், பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளது.