நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிப்பது அவசியமானது என மத்திய உள்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். ஆனால் குறைவான அதிகம் இருக்கும் மாநிலங்கள் நன்கு கள நிலவரங்களை ஆராய்ந்த பிறகே உரிய தளர்வுகளை அளிக்க வேண்டும். அவசரப்பட்டு தளர்வுகள் அளிக்க வேண்டாம். அம்மா நிலங்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடுக்கி விட வேண்டும் என கூறியுள்ளார்.