டிஜிட்டல் முறையில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பயிற்சி நிகழ்ச்சி கர்நாடக காங்கிரஸ் சார்பில் பெங்களூருவில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் மேகதாது பாதயாத்திரையை மீண்டும் தொடங்குவது பற்றி பேசினார். அதாவது “மேகதாது பாதயாத்திரையில் பலரும் பங்கேற்றனர். அதில் சிலருக்கு பங்கேற்க வாய்ப்பு கிடைக்காமல் போனது.
காங்கிரஸின் மேகதாது யாத்திரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் வாபஸ் பெற்ற பிறகு மீண்டும் தொடங்கும். எங்கு பாதயாத்திரையை நிறுத்தினோமோ மீண்டும் அங்கிருந்து பாதயாத்திரை தொடங்கப்படும். எனவே நாங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.