Categories
உலக செய்திகள்

ஊரடங்கு தளர்வு…. இதுக்கு மட்டும் தான் அனுமதி…. சுவிஸ் அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!

ஊரடங்கு தளர்வுகள் குறித்து சுவிஸ் மாகாணம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சுவிட்சர்லாந்திலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 19 முதல் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடு தளர்வுகள் குறித்து பெடரல் கவுன்சில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் ஆனால் ஒரு வகுப்பறையில் 50 மாணவர்களுக்கு மட்டும் அனுமதி என தெரிவித்துள்ளது.

மேலும் திரையரங்குகள், திறந்தவெளி விளையாட்டு அரங்கங்கள் ஆகியவை இயங்கலாம் என்றும் ஆனால் மூன்றில் ஒரு பங்கு மக்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இதனிடையே உணவு விடுதிகள், பூங்காக்கள் ஆகியவை திறக்க அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது. மேலும் நீச்சல் குளங்களுக்கும் அனுமதியில்லை என தெரிவித்துள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், மக்கள் கூடுவதை தவிர்த்தல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |