Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு: இனி இதற்கும் இ-பாஸ் தேவையில்லை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை அரசு அறிவித்து ஜூலை 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதில் நேற்று முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் இ பாஸ் இல்லாமல் செல்லலாம் என சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். சுற்றுலா தலங்களில் 50% நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். பயணிகளின் விவரம் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் கர்நாடகா கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |