கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பத்து நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மறு உத்தரவு வரும் வரை ஜூன் 27 முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு பத்து நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.