தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் டீக்கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனையடுத்து டீ மற்றும் காபி கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கடைக்காரர்கள் கோரிக்கை வித்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பார்சல் முறையில் தேநீர் பெற மக்கள் பாத்திரம் கொண்டு வந்து வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.