நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சந்தைகளில் பொது மக்கள் முககவசம், தனிமனித இடைவெளி எதுவும் கடைபிடிக்காமல் இருப்பது கொரோனா மூன்றாம் அலைக்கு வழிவகுக்கும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் டெல்லி அரசு எச்சரித்துள்ளது. மேலும் சட்டத்தை மதிக்காதவர்களை மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.