Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு தளர்வு…. தஞ்சை பெரிய கோவில் 80 நாட்களுக்கு பிறகு திறப்பு….!!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக 80 நாட்களுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவில் நாளை திறக்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடு பணிகள் தஞ்சை பெரிய கோவில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை காரணமாக தஞ்சை பெரிய கோவில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி மூடப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப் படவில்லை, ஆனால் கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் மட்டுமே நடைபெற்று வந்தன. இதேபோல் பெரியகோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு பக்தர்கள் இன்றி பிரதோஷ வழிபாடும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் பாரம்பரிய சின்னங்கள் மற்றும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்கள் வழிபாட்டுத்தலங்கள் திறக்க அரசு அனுமதி அளித்ததையடுத்து, தஞ்சை பெரிய கோவில் நாளை காலை திறக்கப்படுகிறது. பக்தர்கள் வழிபாட்டுக்காக 80 நாட்களுக்கு பிறகு பெரிய கோவில் திறக்கப்பட உள்ளதால், பெருவுடையார் சன்னதி, பெரியநாயகி அம்மன் சன்னதி, மற்றும் வராகி அம்மன் சன்னதி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், கருவூரார், முருகன் சன்னதி, ஆகிய சன்னதிகள் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இரண்டு அடி இடைவெளிவிட்டு வட்டம் வரையப்பட்டு உள்ளது. பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக இரண்டு வழிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் நுழைவு வாயிலில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, வெப்ப பரிசோதனையும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன முகககவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே உள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |