தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட வந்த ஊரடங்கானது நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளை காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதியளித்திருந்த நிலையில் இன்று முதல் நியாயவிலைக் கடைகள் காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.