Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு…. தமிழகத்தில் பேருந்து சேவை…. புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக தொற்று படிப்படியாக குறைந்த காரணத்தினால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஜூன் 28-ஆம் தேதி தமிழகத்தில் பேருந்துகள் 28 மாவட்டங்களில் மட்டும் இயக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னையில் இருந்து 300 அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ள காரணத்தினால் கூடுதலாக 100 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் நேற்று  முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நேற்று  மாலையிலிருந்து அதிக அளவில் பேருந்துகள் புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |