Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஊரடங்கு தளர்வு -வறுமையின் பசிக்கு தளர்வில்லை வேதனையில் தவிக்கும் சென்னை சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுநர்கள்…!!!

ஆரம்ப காலத்திலிருந்து சென்னையை கலக்கிய ரிக்ஷா ஓட்டுநர்கள் தற்போதைய வாழ்வாதாரத்தை பற்றி கூறியுள்ளனர்.

சாதாரண நாட்களில் கூட மிகவும் குறைவான பயணிகளை மட்டும் நம்பி தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்த ரிக்ஷா ஓட்டுநர்கள், தற்பொழுது ஊரடங்கால் மக்கள் வருகை இன்றி வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். கொரோனாவால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டாலும், ரிக்ஷா தொழில் மிகவும் நலிவடைந்து, அடுத்தவேளை உணவிற்கு என்ன செய்வது என்று குடும்பத்தோடு சோகத்தில் ஆழ்ந்ததுள்ளார். பலர் சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் குடும்பத்தினர். சென்னை ஊரடங்கில் சில தளர்வுகள் இருந்தாலும், கொரோனா அச்சத்தால் மக்கள் ரிக்ஷாவில் பயணிக்க அஞ்சுவதாக கூறுகின்றனர்.

மற்ற போக்குவரத்து வாகனங்களை ஒப்பிடும்போது, ரிக்ஷாவில் பயணம் செய்ய குறைந்த அளவு கட்டணங்களை வசூலித்தாலும், மக்கள் ரிக்ஷா பயணங்களை தவிர்ப்பதால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அரசு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் இல்லை என்றால் காலப்போக்கில் ரிக்ஷா சைக்கிள்களை அருங்காட்சியகத்தில் மட்டுமே காண கூடிய சூழல் உருவாகிவிடும் என்று, வேதனை தெரிவித்துள்ள ரிக்ஷா ஓட்டுனர்கள், அரசின் உதவி கரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Categories

Tech |