Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு, திறக்காத பள்ளிகள்….. கடும் அதிர்ச்சி செய்தி! Very Bad…!!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனை கருதி தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், இருசக்கர வாகனம் ஓட்டும் சிறுவர் சிறுமியர் களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய பெற்றோர்களே வாகனத்தை கொடுக்கின்றனர். அவர்கள் சாலைகளில் வாகனத்தை வேகமாக இயக்குகின்றனர். லைசென்ஸ் இல்லாததால் அவர்கள் விபத்து ஏற்படுத்தினால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என கூறியுள்ளனர்.

Categories

Tech |