Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு: இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும்…. கூடுதல் தளர்வுகள் என்னென்ன…???

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. முன்னதாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன.இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் ஜூலை-12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில் அனைத்து மாவட்டங்க்ளுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதில் என்னென்ன கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பார்க்கலாம்.

மாவட்டங்களுக்கிடையே பயணிக்க இ-பாஸ், இ-பதிவு நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து இ-பாஸ் கட்டாயம்.

தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 50% வாடிக்கையாளர்களுடன் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் இரவு 8 மணி வரை கடைகள் திறக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கேளிக்கை, பொழுதுபோக்கு பூங்காக்களில் திறந்தவெளி விளையாட்டுகளுக்கு அனுமதி.

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

துணிக்கடை, நகைக்கடைகள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ணவும்,  டீக்கடைகளில் அமர்ந்து தேநீர் அருந்தவும் அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |