ஈரோடு மாவட்டத்திற்கு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்குள்ள கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்… தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்கு நீடிக்கப்பட மாட்டாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் இனி புதிதாக எந்த மாவட்டம் பிரிக்கப்பட்டாது. மின்கட்டண நடைமுறையில் எந்த குறையும் இல்லை என்றும் தெரிவித்தார்.