தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் டிசம்பர் 1 முதல் அடுத்த கட்ட தளர்வு அறிவிக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் வருகின்ற நவம்பர் 30ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், மருத்துவக் குழுவுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே பல்வேறு தளர்வுகள் அமலில் உள்ள நிலையில், மேலும் பல தளர்வு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அதிலும் முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு, மெரினா கடற்கரையில் அனுமதி, மதுபான பார்கள் திறப்பு உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. மேலும் டிசம்பர் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.