கொரோனா பெருமூச்சு பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்டமாக மத்திய மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகிறது. தமிழகத்திலும் கூட வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள் நடத்த மேலும் 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணி, உண்ணாவிரதம் நடத்த டிசம்பர் 15ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது