தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் முதல்வர் நேற்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அப்போது கூடுதல் தளர்வுகளுடன் வரும் 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க மருத்துவ குழு பரிந்துரை செய்தது. இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று வகையான மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் 27 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மற்ற 11 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகள் அளிக்கப்படவில்லை. அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் புதிய தளர்வுகள் கிடையாது. தேநீர், டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி கிடையாது என்ற நிலை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.