தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக தொற்று பாதிப்பு கணிசமான அளவில் குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரிக்கும் பேருந்து சேவையை அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக தமிழகம் -கர்நாடகாவில் பேருந்துகள் இயங்க தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவிலிருந்து தமிழகம் வரும் பயணிகள் அம்மாநில பேருந்துகளில் பயணிக்க ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஏறி தாளவாடி பகுதிக்கு வருகின்றனர். அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்கின்றனர். இதனால் தமிழக பேருந்துகளில் கூட்டம் அலை மோதுவதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் புகார் அளித்துள்ளனர்.