இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி மாநிலத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது.
இதனால் டெல்லி முழுவதும் இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நடைமுறையில் இருந்த இ-பாஸ் செயல்முறைகள் ஊரடங்கு காலங்களில் செல்லுபடியாகுமா என்று கேள்வி எழுந்தது. இதற்கு அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் அல்லது பிற வகை தொடர்பான இயக்கங்களுக்கு வழங்கப்படும் இ- பாஸ் வார இறுதி மற்றும் இரவு ஊரடங்கில் செல்லுபடியாகும் என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.