தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட வழக்கில் தற்போது வரை கோடிக்கணக்கில் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை கூறியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கக்கூடிய வகையில் தமிழ்நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் எவரும் அவசியமில்லாமல் வெளியில் வரக்கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை உத்தரவை மீறி செயல்படுபவர்களை தமிழ்நாடு காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி உத்தரவை மீறி செயல்படும் இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் கட்டுப்படுத்தி கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து 128 நாட்கள் ஆகின்றது. இந்த நாட்களில் தடையை மீறி செயல்பட்ட 9 லட்சத்து 19 ஆயிரத்து 186 பேரை காவல்துறையினர் கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்து இருக்கின்றனர். மேலும் 6 லட்சத்து 57 ஆயிரத்து 684 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 19 கோடியே 17 லட்சத்து 55 ஆயிரத்து 728 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை கூறியுள்ளது.